செய்திகள்

அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பவன் நானே

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு தற்போதுள்ள முன்னுரிமை இல்லாது செய்யப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக முதலாவதாக எதிர்ப்பு தெரிவிப்பவர் நானாகவே இருப்பேன் என தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நெத் எப்.எம் சிங்கள வானொலியில் இடம்பெற்ற அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடலொன்றின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னைய அரசியலமைப்பில் இல்லாத ஜனநாயகம் தொடர்பான விடயங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)