செய்திகள்

அரசியலமைப்பு பேரவையில் கூட்டமைப்பின் உறுப்பினரின் பெயருக்கு எதிர்ப்பு!

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சிசார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் உறுப்பினரான பரிந்துரைக்கப்பட்டதை வீரவன்ச அணி எதிர்த்துள்ளது.

அதற்கு பதிலாக உதய கம்மன்பிலவின் பெயரை குறித்த அணி பரிந்துரைத்துள்ளது.

எனினும் கூட்டமைப்பின் உறுப்பினருக்கு வெளியிடப்பட்ட எதிர்ப்பு இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்விற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்ட நிலையில், வரவுசெலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் கூட்டமைப்பு கலந்துகொள்ளாதமை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன உறுப்பினர்கள் குழு, அதற்கு எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என்று உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

-(3)