செய்திகள்

அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு: புளொட் தீர்மானம்

அரசியலமைப்ப விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதென புளொட் தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை முற்பகல்  10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரையில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தினை கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இன்றைய அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக தீவிரமாக ஆராயப்பட்டது. அத்துடன் அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக பேசப்பட்டது.

இதன்போது தீர்வு விடயத்திலே மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் இருந்தாலும் இதற்கு ஒரு முடிவ வரும்வரையில் நாம் அதற்கான முயற்சியைத் தொடரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதோடு, அரசியலமைப்ப விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் முழுமையாக ஆதரவு கொடுத்து செயற்பட வேண்டும் என்று மேற்படி கட்சிச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.:-06