அரசியல் கைதிகள் மூவரின் உடல் மோசம்: அனுராதபுரம் வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
உண்ணாவிரதப்போராட்டதினில் குதித்துள்ள அரசியல்கைதிகளது உடல்நிலை மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கைதிகள் மூவரும் இன்று காலை முதல் தாம் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் ஒறுத்து போராட்டத்தை தொடர்ந்திருந்த நிலையில் மதியம் அவர்கள் உடல்சோர்வுற்று மயக்கமடைந்திருந்தனர்.
இதனையடுத்தே அவர்களினை சிறைச்சாலை நிர்வாகம் அச்சங்காரணமான அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதித்துள்ளது.
முன்னதாக சிறைச்சாலை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு அவர்களிற்கு ஆரம்ப கட்ட வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் சிறைச்சாலை வைத்தியர் கைவிரித்ததையடுத்தே அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆறு பேர் சனிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உணவு தவிர்ப்பை கைவிடுமாறு விடுத்த கோரிக்கை அரசியல் கைதிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 3 அரசியல் கைதிகளும் கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இது 11வது தடவையாக அர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டமாகும்.
தற்போது கோருவது விடுதலையோ அல்லது ஓர் தண்டனைக்குறைப்போ அல்ல. மாறாக வழக்கு நடவடிக்கைகள் நாளை 9ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வழக்கினை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இவ் உணர்வு தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (09.10) முதல் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டங்களும் நடைபெறவுள்ளது.
N5
