செய்திகள்

அரசியல் தீர்மானங்களுக்கென தனியான அமைச்சரவை கூட்டம்

அரசியல் தீர்மானங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தனி அமைச்சரவை கூட்டமொன்றை வாராந்தம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அதனால் அரசாங்கத்திற்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் நிலையில் அதனை சீர் செய்யும் வகையிலேயே இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் வாராந்த அமைச்சரவை கூட்டங்களின் பின்னர் அரசியல் தீர்மானங்கள் தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)