செய்திகள்

அரசியல் பிரமுகரின் மகனின் 40 இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்

கடந்த ஆட்சிக் காலத்தில் பிரபல அரசியல்வாதியின் மகனொருவரால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 1200சீ.சீ ரக மோட்டார் சைக்கிளொன்று கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் அப்தூல் ஹமீட் பிரதேசத்தில் அறையொன்றிலிருந்து இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Ducati என்ற ரகத்தை சேர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் இலங்கையில் வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படாத மோட்டார் சைக்கிள் என்பதுடன் இதன் பெறுமதி 40 இலட்சத்திற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)