அரசியல் பிரமுகர் புதல்வரின் பாதுகாப்பு ஊழியர்கள் களியாட்ட விடுதியில் அடாவடி
கொழும்பு கொம்பனித்தெரு இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனக் கூறப்படும் நபர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி அந்த விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளரினால் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நள்ளிரவு 12 மணியளவில் குறித்த அரசியல் பிரமுகரின் மகனும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அந்த விடுதிக்கு சென்றுள்ளதுடன் அவர்களுடன் 15 பேர் கொண்ட குழுவொன்று உள்ளே செல்ல முயற்சித்துள்ளன. இவ்வேளையில் அவர்களுக்கு உள்ளே செல்ல பாதுகாப்பு உழியர்கள் இடமளிக்காததை தொடர்ந்து பின்னர் 4.30 மணியளவில் அங்கு வந்து கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்தவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




