செய்திகள்

தமிழகத்தில் ஆன்மாவின் வழிகாட்டலில் ஒரு அரசியல்

வீரகத்தி தனபாலசிங்கம்

மி­­கத்தில் கடந்த இரு வாரங்­­ளாக நடந்­தே­றிய பல திடீர்த் திருப்­பங்­­ளுடன் கூடிய திரைப்­­டப்­பா­ணி­யி­லான அர­சியல் நிகழ்வுப் போக்­குகள் ஒரு­வா­றாக ஒரு இடை­நிலை முடி­­மை­திக்கு வந்­தி­ருக்­கின்­றன போலத் தெரி­கி­றது. மாநி­லத்தின்   முத­­மைச்­­ராக ஆட்­சி­­தி­கா­ரத்­துக்கு வர ஆசைப்­பட்ட அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் பொதுச் செய­லாளர் சசி­கலா நட­ராஜன் சொத்­துக்­கு­விப்பு மேன் முறை­யீட்டு வழக்கில் இந்­திய உச்ச நீதி­மன்றம் அளித்த தீர்ப்­பை­­டுத்து பெங்­­ளூரில் சிறை­வா­சத்தை அனு­­விக்க ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

அவரின் விசு­வா­சி­யான எடப்­பாடி கே. பழ­னிச்­சாமி முத­­மைச்­­ராக பத­வி­யேற்­றி­ருக்­கிறார். சொத்­துக்­கு­விப்பு வழக்கின் முத­லா­வது குற்­­வா­ளி­யான முன்னாள் முத­­மைச்சர் ஜெய­­லிதா உயி­ருடன் இருந்­தி­ருந்தால் சிறைக்குப் போவ­தற்கு முன்­­தாக . பன்­னீர்ச்­செல்­வத்தை மூன்­றா­வது தட­வை­யா­கவும் முத­­மைச்­­ராக்­கி­யி­ருப்பார். ஜெய­­லி­தாவின் மூன்று தசாப்­தங்­­ளுக்கும் அதி­­மான கால அர­சி­யல்­வாழ்வில் பெரும் பகு­தியில் அவரை இடை­­றாது அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருந்த இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை மர­ணத்­தினால் மாத்­தி­ரமே விடு­விக்­கக்­கூ­டி­­தாக இருந்­தது.

palanisamy-121

கடந்த டிசம்­பரில் ஜெய­­லிதா கால­மா­­தை­­டுத்து மூன்­றா­வது தட­வை­யாக முத­­மைச்­­ராக பத­வி­யேற்றுக் கொண்ட பன்­னீர்­செல்­வத்தை அகற்­றி­விட்டு அப்­­­வியைத் தன­தாக்கிக் கொள்ள ஜெய­­லி­தாவின் ஆரு­யிர்த்­தோழி சசி­கலா முயற்­சித்­ததன் விளைவே கடந்த இரு­வார கால சர்ச்­சைகள். 1987 டிசம்­பரில் அன்­றைய முத­­மைச்சர் எம்.ஜி.ஆர் கால­மா­­தை­­டுத்து, அவரின் மனைவி ஜானகி தலை­மை­யிலும்  காதலி ஜெய­­லிதா தலை­மை­யிலும் அண்ணா தி.மு.. இரு அணி­­ளாகப் பிள­வு­பட்ட போதிலும் அடுத்­து­வந்த சட்­­சபைத் தேர்­தலில் ஜெய­­லிதா அணியே செல்­வாக்­கு­மிக்­­தென்று நிரூ­பிக்­கப்­பட்­­தை­­டுத்து அணிகள் ஒன்­று­பட்­டதைக் காணக்­கூ­டி­­தாக இருந்­தது. ஆனால், இப்­போது பன்­னீர்­செல்வம் தலை­மை­யி­லான அணி­யா­கவும் சசி­கலா அணி­யா­கவும் பிள­வு­பட்­டி­ருக்கும் இக்­கட்சி மீண்டும் ஒன்­றி­ணை­­தற்­கான வாய்ப்­புகள் குறித்து உட­­டி­யாக எதையும் கூற­மு­டி­­வில்லை. என்­றாலும், தனது பெறா­மகன் தின­­­னையே கட்­சியின் துணைப் பொதுச் செய­லா­­ராக்கி விட்டுச் சிறை சென்­றி­ருக்கும் சசி­­லாவின் அணியே மாநி­லத்தில் இப்­போது ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருப்­பதால் பன்­னீர்­செல்­வத்­தினால் பெரி­தாக வியூ­கங்­களை வகுப்­பது சிர­­மா­­தாக இருக்­கக்­­கூடும்.

எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து அண்ணா தி.மு.. விற்குள் ஏற்­பட்ட பிளவு கலைஞர் கரு­ணா­நிதி தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்றக் கழகம் 13 ஆண்­டு­­ளுக்குப் பிறகு ஆட்­சியைப் பிடிப்­­தற்கு வசதி செய்து கொடுத்­தது.

ஜெய­­லி­தாவின் மறைவைத் தொடர்ந்து ஏற்­பட்­டி­ருக்கும் பிள­வையும் சாத்­தி­­மா­­­வுக்கு தனக்குச் சாத­­மாக்கிக் கொள்­வதில் கலை­ஞரின் மகன் ஸ்டாலின் தலை­மையில் தி.மு. முயற்­சி­களை மேற்­கொள்ளும் என்­பதில் சந்­தே­­மில்லை. எடப்­பாடி பழ­னிச்­சா­மியை முத­­மைச்­­ராகக் கொண்டு மீத­முள்ள நான்கு வரு­­கா­லத்­துக்கும் ஆட்­சி­­தி­கா­ரத்தில் தொட­ரு­­தற்கு அண்ணா தி.மு.. வினர் உறு­தி­யாக இருப்­பார்­­ளே­யானால், 2021 வரை அடுத்த சட்­­சபைத் தேர்­­லுக்­காக காத்­தி­ருப்­பதைத் தவிர தி.மு.. வின­ருக்கு வேறு வழி­யில்லை. ஆனால், எம்.ஜி.ஆரைப் போன்றோ அல்­லது ஜெய­­லி­தாவைப் போன்றோ ஜன­ரஞ்­­­மான ஆளுமை கொண்ட தலை­மைத்­துவம் ஒன்று இல்­லாத நிலையில், ஏற்­­னவே பிளவு ஏற்­பட்டு விட்ட கழ­கத்தைக் கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருப்­­தென்­பது கஷ்­­மான காரி­யமே. (பழ­னிச்­சாமி பத­வி­யேற்ற உட­­டி­யாக முக­நூலில் பதி­வொன்றைச் செய்த சென்னை ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றின் கார்ட்­டூனிஸ்ட் ஒருவர், பழ­னிச்­சா­மியின் கார்ட்­டூனை நான் சரி­யாக வரையத் தொடங்கும் வரை­யா­வது அவர் பத­வியில் நீடிப்பார் என நம்­பு­­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார் .)  சசி­­லாவைப் பொறுத்­­வரை அண்ணா தி.மு.. தனது குடும்­பத்தின் கட்­டுப்­பாட்டில் இருப்­பதை உறுதி செய்யும் நோக்கில் செய்து விட்டுச் சென்­றி­ருக்கும் ஏற்­பா­டு­களை கழகத் தொண்­டர்கள் மாத்­தி­­மல்ல தமி­ழக மக்­களும் எவ்­வாறு நோக்­கு­கி­றார்கள் என்­­தைப்­பொ­றுத்தே எதிர்­கால நிலை­­ரங்கள் அமையும்.

இரு பிர­தான திரா­விட இயக்கக் கட்­சி­களைப் பொறுத்­­­ரை­யிலும் கொள்கை, கோட்­பாடு என்று பெரி­தாக எந்த  வேறு­பாடும் கிடை­யாது. ஆட்­சிக்கு வரு­வதும் பழி­பா­வத்­துக்கு அஞ்­சாமல் பணம் குவிப்­­துமே அவ்­விரு கட்­சி­களின் தலை­வர்­களின்இலட்­சி­யங்­­ளாகஇருந்­ததே அண்­மைக்­கால வர­லாறு. தலை­மைத்­து­வத்தில் இருக்­கக்­கூ­டியஆளு­மை­களைச் சுற்றி கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட துதி­பாடல் வழி­பாட்டு கலா­சாரம் அண்ணா தி.மு.. விற்­குள்ளும் தி.மு..விற்­குள்ளும் வேரூன்றிப் போயி­ருக்­கி­றது. ஜெய­­லிதா இந்த தனி நபர் வழி­பாட்டு அர­சியல் கலா­சா­ரத்தை ஒரு உச்ச நிலைக்கு வளர்த்து விட்டே சென்­றி­ருக்­கிறார். அண்­மையில் பன்­னீர்­செல்வம் சசி­­லா­விற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழு­­தற்கு முன்­­தாக சென்னை மெரீனா கடற்­­ரையில் எம்.ஜி.ஆர். சமாதி வளா­கத்­திற்குள் இருக்கும் ஜெய­­லி­தாவின் நினை­வி­டத்­துக்குச் சென்று தியா­னம்­செய்­து­விட்டுஅம்மாவின் ஆன்மா கட்­­ளை­யிட்­டதன் பிர­கா­ரமே செயற்­­டு­கிறேன் என்று  பிர­­டனம் செய்தார்.

ஜெய­­லிதா விசு­வா­சி­களைப் பொறுத்­­­ரையில் அந்த நினை­விடம் ஒரு வழி­பாட்டுத் தலமே. சசி­­லாவும் கடந்த புதன்­கி­ழமை பெங்­களூர் சிறைக்குச் சென்று சர­­டை­­தற்கு முன்­­தாக ஜெய­­லிதா நினை­வி­டத்தில் வழி­பட்­டு­விட்டு சப­தமும் எடுத்­துக்­கொண்­டதைக் காணக்­கூ­டி­­தாக இருந்­தது.

sasikala 1

அண்ணா தி.மு.. வின் அர­சியல் என்­பது அடிப்­­டையில் கரு­ணா­நிதி குடும்­பத்­­வர்­­ளுக்கும் தி.மு.. வுக்கும் எதி­ரா­னதே. அதற்கு காரணம் கரு­ணா­நி­தி­யுடன்  முரண்­பட்­டுக்­கொண்டே எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு..வை ஆரம்­பித்தார். முற்­று­மு­ழு­தாக கரு­ணா­நிதி மீதான குரோ­தத்தை பிர­தான பிர­சாரப் பொரு­ளாகக் கொண்டு தான் எம்.ஜி. ஆரின் அர­சியல் செயற்­பா­டுகள் அமைந்­தன. அதே வழி­யி­லேயே ஜெய­­லி­தாவும் அர­சியல் செய்தார். கரு­ணா­நி­தியை நேருக்கு நேர் பார்ப்­­தைக்­கூட ஜெய­­லிதா தவிர்த்தார். அத்­­கை­­தொரு கசப்பு அர­சியல் கலா­சா­ரத்­தையே அவர்கள் வளர்த்­தெ­டுத்­தி­ருந்­தார்கள். இப்­போது ஜெய­­லிதா இல்­லாத நிலையில் கரு­ணா­நிதி குடும்­பத்­துக்கு எதி­ரான உணர்­வு­களைப் பிர­தா­­மாகக் கொண்ட அர­சி­யலை அண்ணா தி.மு.. வினால் முன்­னெ­டுக்கக் கூடி­­தாக இருக்­குமா? உச்ச நீதி­மன்றத் தீர்ப்பு வெளி­யி­டப்­பட்­­பி­றகு சென்­னைக்கு வெளியே கூவத்­தூரில் நட்­சத்­திர ஹோட்­டலில் தனது அணியின் சட்­­சபை உறுப்­பி­னர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய சசி­கலாஅம்­மா­வுக்கும் எங்­­ளுக்கும் எதி­ராக இந்த சொத்­துக்­கு­விப்­பு­­ழக்கைப் போட்­டவர் கரு­ணா­நிதி. தி.மு. என்று ஒரு கட்சி இருந்­ததா என்று எதிர்­கா­லத்தில் ஆட்கள் கேட்­கக்­கூ­டி­­தாக நாம் செயற்­பட வேண்டும்என்று கூறினார்.

எம்.ஜி.ஆருக்­குப்­பி­றகு கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கும் ஆட்­சிக்கும் வரு­வதில் ஜெய­­லிதா பல  சோத­னை­களைத் துணிச்­­லுடன் எதிர்க்­கொண்டு கடந்து வந்­ததைப் போன்று இன்று தனக்கு ஏற்­பட்­டி­ருக்கும் சோத­னை­களைத் தாண்டி தன்­னாலும் வெற்­றி­­­மாக வெளிக்­கி­ளம்ப முடி­யு­மென்று சசி­கலா நினைக்­கிறார் போலத் தெரி­கி­றது. ஜெய­­லி­தாவின் மறை­வுக்­குப்­பி­றகு சக­­வி­தத்­திலும் அவரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்­பதில் தான் சசி­கலா பெரிய தவறை இழைத்­தி­ருக்­கிறார்அம்­மா­வுக்குப் பதி­லாக சின்­னம்மா என்ற தோர­ணையில் பன்­னீர்ச்­செல்வம் உட்­பட கழ­கத்தின் மூத்த தலை­வர்­களே கால­டியில் வீழ்ந்­ததும் அவ­ருக்கு நம்­பிக்­கையைக் கொடுத்­தது போலும். கரு­ணா­நி­திக்கு எதி­ராக ஜெய­­லிதா வளர்த்­தெ­டுத்த கசப்பு அர­சியல் கலா­சா­ரத்தை மேலும் முன்­னெ­டுக்க வேண்­டிய முனைப்பு சசி­­லா­வுக்கு இருக்கும் என்­பதில் சந்­தே­­மில்லை. அதைச் சாதிக்­கக்­கூ­டிய ஆளுமை அவ­ரிடம் இருக்­கி­றதா? எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரின் இடத்தில் ஜெய­­லி­தாவை வைத்துப் பார்த்­ததைப் போன்று ஜெய­­லிதா இடத்தில் சசி­­லாவை வைத்துப் பார்க்க மக்கள் தயா­ரா­யி­ருக்­கி­றார்­களா? சிறையிலிருந்து சசிகல வெளியே வரும்போது அண்ணா தி.மு.. என்ன கோலத்தில் இருக்குமோ?

சசிகலா சிறைக்குள் இருந்து கொண்டு தனது குடும்­பத்­­வர்­களின்  ஊடாக அண்ணா தி.மு...வை வழி­­டத்­தவோ அல்­லது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவோ முடி­யுமா என்­பதை விரைவில் உண­ரக்­கூ­டி­­தாக இருக்கும்.

சிறைக்குப் போனதால் தமி­ழக மக்கள் மத்­தியில் சசி­கலா மீது அனு­தாபம் பிறந்­தி­ருக்­கி­றது என்று கூறி­விட முடி­யாது. பதி­லாக ஜெய­­லிதா ஊழல்­களில் சம்­பந்­தப்­­டு­­தற்கு சசி­கலா குடும்­பத்­­வர்­களே முக்­கிய காரணம் என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் பர­­லாக இருக்­கி­றது. ஜெய­­லி­தாவை ஒருதெய்வம்போன்று கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட பிம்­பத்­துக்கு மறு­பு­றத்தில் தன்­னையும் தன் குடும்­பத்­­வர்­­ளையும் சாத்­தான்­­ளாக வர்­ணித்துக் கட்­டி­­யெ­ழுப்­பப்­பட்ட பிம்­பத்தை அறி­யா­­­ராக சசி­கலா இருந்­தி­ருக்­கிறார் என்று கடந்­­வாரம் தமி­ழக அர­சியல் அவ­தானி ஒருவர் கூறி­யி­ருந்­தது கவ­னிக்­கத்­தக்­கது.

அடுத்­­தாக உச்­­நீ­தி­மன்றம் கடந்த வார தீர்ப்பில் ஜெய­­லி­தா­வுக்கும் சசி­­லா­வுக்கும் இடை­யி­லான உறவு பற்றி தெரி­வித்த கருத்­தொன்று மிகவும் கவ­னத்­திற்­கொள்ள வேண்­டி­­தா­கி­றது.

ஜெய­­லிதா பரோ­­கார உணர்வின் தூண்­டு­தலின் கார­­மாக அல்ல, தங்­­ளது கிறி­மினல் நட­­டிக்­கை­களின் விளை­வாக ஏற்­­டக்­கூ­டிய எந்­­வொரு சட்டச் சிக்­கல்­களில் இருந்தும் தன்னைப் பாது­காத்­துக்­கொள்­­தற்­காக மிகவும் சூழ்ச்­சித்­­­மான நோக்­குடன் தான் சசி­­லாவை போயஸ் தோட்ட வாசஸ்­­லத்தில் தன்­னுடன் வாழ அனு­­தித்­­தாக உச்­­நீ­தி­மன்ற நீதி­­­சர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

ஜெய­­லிதா உயி­ருடன் இருந்­தி­ருந்தால் இன்று அவரும் சசி­­லா­வுடன் பெங்­களூர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருப்பார்.

sasikala jail

 ஊழல் வழக்­கு­களில் குற்­­வா­ளி­யாகக் காணப்­பட்­­தற்­காக மூன்­றா­வது தட­வை­யாக முத­­மைச்சர் பத­வியைத் துறக்க வேண்­டி­யேற்­பட்­டி­ருக்கும். 100 கோடி ரூபாவை தண்­டப்­­­மாக செலுத்­­வேண்­டி­யேற்­பட்­டி­ருக்கும். உயி­ருடன் இல்லை என்ற கார­ணத்­துக்­கா­கவே அவர் வழக்கில் இருந்து விடு­விக்­கப்­பட்டார். ஒரு இலட்சம் கோடி ரூபா, நான்கு இலட்சம் கோடி ரூபா என்­றெல்லாம் ஊழல் செய்­தி­களில் அடி­­டு­கின்ற இன்­றைய காலக்­கட்­டத்தில் வெறு­மனே 66.6 கோடி ரூபா சொத்­துக்­கு­விப்பு வழக்கில் முன்னாள் முத­­மைச்­­ருக்கும் சக­பா­டி­­ளுக்கும் வழங்­கப்­பட்ட தண்­டனை இன்­றைய தலை­மு­றை­யி­­ருக்கு ஆச்­­ரி­­மா­கவும் அதீ­­மா­கவும் கூடத்­தோன்­றலாம் என்று பேசப்­­டு­­தையும் காணக்­கூ­டி­­தாக இருக்­கி­றதுஅந்த சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சம்­பந்­தப்­பட்ட தொகை­யை­வி­டவும்  பல ஆயிரம் மடங்கு தொகை ஊழல்­களில் சம்­பந்­தப்­பட்­­தாக தமி­­கத்தின் வேறு சில திரா­விட இயக்க  அர­சியல் வாதிகள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டதன்  கார­ணத்­தி­னால்தான் பிற்­கா­லத்தில் ஜெய­­லி­தாவின் ஊழல் தமி­ழக மக்கள் மத்­தியில் ஒரு பொருட்­டாகத் தென்­­­வில்லை. இல­­சங்­களை அள்ளி வீசினால் மக்கள் தங்­­ளது முன்­னைய நடத்­தை­களை மக்கள் மறந்து விடு­வார்கள் என்று அர­சி­யல்­வா­திகள் நம்­பு­கி­றார்கள். இத­னால்தான் ஜெய­­லிதா தொடர்ச்­சி­யாக தேர்­தலில் பெரு வெற்­றி­களைப் பெறவும் முடிந்­தது.

ஆனால், இப்­போது நீதி­மன்­றமே அவரை ஊழல் செய்­தவர் என்று நிரூ­பித்­தி­ருப்­பதால், அதுவும் தன்னால் செய்­யப்­­டு­கின்ற ஊழல் மோச­டி­­ளுக்கு கவ­­மாக சசி­கலா குடும்­பத்தை ஜெய­­லிதா பயன்­­டுத்­தி­­தாக தீர்ப்பில் கூறப்­பட்­டுள்ள நிலையில் அம்­மாவின் கொள்­கை­களை பின்பற்றி அவரின் திட்டங்களை முன்னெடுக்கப் போகிறோம் என்றும் அம்மாவின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்றும் அண்ணா தி.மு.. அரசியல்வாதிகள் கூறும்போது தாங்கள் எதிர்கொள்ளப்போகிற தார்மீகச் சிக்கலை அவர்கள் விளங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்காலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் இதை நிச்சயமாக தங்களுக்கு வசதியான முறையில் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், ஜெயலலிதாவின் அரசியல் மரபு நல்லொழுக்க ஆட்சி முறைக்கு அப்பாற்பட்டதாகவே அடையாளப் படுத்தப்படப்போகிறது.

என்றாலும், முதலமைச்சராக பதவியேற்ற உடனடியாக பழனிச்சாமி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று வழிபட்டு அம்மா வழியில் சின்னம்மாவின் வழிகாட்டலில் ஆட்சி செய்யப்போவதாக அறிவித்ததையும்  அடுத்து பன்னீர்ச்செல்வம் இப்போது அமைந்திருப்பது சசிகலா குடும்ப ஆட்சியென்றும் அந்த ஆட்சியை அகற்றி விட்டு அம்மாவின் விசுவாசிகளால் நிரம்பிய ஆட்சியை நிறுவப்போவதாகச் சூளுரைத்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. அம்மாவின்ஆன்மாவேதங்களுக்கு வழிகாட்டுவதாக இவர்கள் எந்த விதமான கூச்சமுமின்றிக் கூறுகிறார்கள். அந்த ஆன்மாவின் வழிக்காட்டலில் நடத்தப்படுகின்ற அரசியலின் கதியை அடுத்த ஒரு தேர்தலில் தான் பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

(இது பழனிச்சாமி அரசாங்கம் தமிழக சட்ட சபையில் அதன் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்திற்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.)