செய்திகள்

அரசுக்கு எதிராக திரும்பிய வெக்னா் கூலிப்படை: ரஷ்யாவில் பதற்றம்

வெக்னா் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஒன் டொன் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக சா்வதேச செய்திகள் தொிவிக்கின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போரில் ரஷ்யா பாதுகாப்பு படையினருடன் இணைந்து ´வெக்னா்´ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இது ரஷ்யாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வெக்னா் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகிறது.

சமீபகாலமாக ரஷ்யா ராணுவ அதிகாரிகள் மீதும், வெக்னா் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த வெக்னா் அமைப்பு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

-(3)