செய்திகள்

அரசுடன் ஜே.வி.பி. ஒருபோதும் இணையாது : அனுரகுமார திசாநாயக்க அறிவிப்பு

மக்­களின் பூரண ஆத­ரவை பெறும் வரை மக்கள் விடு ­தலை முன்­னணி எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டாது. மக்­க­ளுடன் இணைந்து செயற்­படும் நாம் எந்­த­வொரு அர­சாங்கம் ஆட்சி அமைத்­தாலும் அந்த அர­சாங்­கத் தின் தவ­றுகள் தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­வ­தோடு, அர­சாங்­கத்­தினால் நாட்­டிற்கும், மக்­க­ளுக்கும் முன்­னெ­டுக்க வேண்­டிய நலத்­திட்­டங்­களை வலி­யு­றுத்­துவோம் எனவும் குறிப்­பிட்­டது.

எமது கட்­சி­யா­னது அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­மானால் அர­சாங்க பிர­தி­நி­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அனைத்து வித­மான ஊழல் செயற்­பா­டு­களும் மக்­க­ளுக்கு தெரி­யாமல் போவ­தோடு இதனை சுட்­டி­காட்ட எந்­த­வொறு தரப்­பி­னரும் முன்­வர மாட்­டார்கள். எவ்­வா­றா­யினும் நாட்டை முன்­னோக்கி நகர்த்தும் அனைத்­து­வி­த­மான செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவை செலுத்­துவோம் எனவும் குறிப்­பிட்­டது.

பிர­தமர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்க மக்கள் சந்­திப்பு ஒன்றில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உட்­பட மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யிடன் ஒன்­றி­ணைந்து நாட்டை முன்­னோக்கி நகர்த்த தயா­ராக இருக்­கின்றோம் என தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய அனுர குமா­ர­தி­ஸா­நா­யக்­க­விடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுர குமார திஸா­நா­யக்க குறிப்­பி­டு­கையில் . மக்­களின் பூரண ஆத­ர­வினை பெறும் வரை எந்­த­வொரு சுய­நல தேவைக்­கா­கவும் எமது கட்­சி­யா­னது அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டாது. நாம் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டவே விரும்­பு­கின்றோம் அந்­த­வ­கையில் இந்த அர­சாங்­கத்தின் ஊழல் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் கடந்­த­கா­லங்­களில் மக்­க­ளுக்கு ஆத­ரங்­க­ளுடன் வெளிப்­ப­டுத்தி உள்ளோம்.

நல்­லாட்­சி­யினை ஸ்தாபிப்­ப­தாக தெரி­வித்து ஆட்சி பீடம் ஏறி­ய­வர்கள் இன்று ஊழல் வாதி­களை இணைத்து கொண்டு அர­சி­யல்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஊழல் விசா­ர­ணைகள் என்­பன இன்று மந்த கதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த அர­சாங்­கத்தின் ஊழல்­செ­யற்­பா­டுகள் உட்­பட தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஊழல்­தொ­டர்பில் நாம் பல்­வேறு ரீதியில் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­திய போதிலும் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களும் மந்த கதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்லும் முக­மாக அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்து வித­மான செயற்­பா­டு­க­ளுக்கும் நாம் பூரண ஆத­ர­வினை வழங்க தயா­ரா­கவே உள்ளோம். அதே நேரம் ஊழல் வாதி­க­ளுடன் இணைந்து செயற்­பட நாம் எந்­த­வொறு சந்­தர்ப்­பத்­திலும் த யாரில்லை.”
R-06