செய்திகள்

அரசு வைத்தியசாலைகளில் பரிசோதனை இயந்திரங்கள் செயலிழப்பு

சில CT Scan இயந்திரங்கள் பல மாதங்களாக செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறினார்.

இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளமையினால் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்தவிடம் வினவிய போது, குறித்த இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்காக நிதி அமைச்சிடம் இருந்து தற்போது நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, அவற்றை விரைவாக பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-(3)