அரச ஊடகங்கள் மகிந்தவுக்கு ஆதரவாக நிற்கின்றதா? : சந்தேகிக்கும் அரசாங்கம்
அரச ஊடகங்கள் சிலவற்றின் பிரதானிகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்கள் சிலவற்றில் அண்மையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கருத்து திரிபுபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளன. தனியார் ஊடகங்கள்தான் அப்படியென்றால் அதனையம் தாண்டி அரச ஊடகங்கள் உள்ளன. இன்னும் மகிந்த ராஜபக்ஷவின் அட்டவணைப்படியே அந்த ஊடகங்கள் செயற்படுவதாக கருதுகின்றோம். மகிந்தவின் கூட்டங்கள் நடக்கும் கால அட்டவனையைக்கூட அந்த ஊடகங்களில் காணக் கூடியதாகவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார் -(3)




