செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கடமையில் இராணுவத்தினர்!

வைத்தியசாலைகளின் சேவைகளுக்குத் தேவைக்கேற்ப இராணுவத்தினரை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனடிப்படையில், வைத்தியசாலைகளின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சிறு தொழிலாளர் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கியதுடன், நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலை நடவடிக்கைகளை இடையூறு இன்றி மேற்கொள்ளும் வகையில் இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

-(3)