செய்திகள்

அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாக ரஜினி நாயகி

வட இந்தியாவில் பிரபலமாக திகழும் முன்னணி நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 வில் நடிகை கஜோல் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மலையாள உலகில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை தமிழில் ரீமேக் செய்வது அனைவரும் அறிந்ததே. இதில் ரஜினி முதற்கொண்டு பலரிடம் பேச்சுவார்த்தை சென்று கடைசியில் அரவிந்த் ஸ்வாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா, மீண்டும் பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் ரீமேக்கில் அரவிந்த் சுவாமி ஜோடியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

N5