அரிசியை அதிக விலைக்கு விற்றால் இந்த இலக்கத்திற்கு அறிவியுங்கள்
அரிசி பதுக்கல் உள்ளிட்ட அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யவென விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி யாரெனும் அரிசி பதுக்கல் , அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் மேல் அரிசியை விற்பனை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாக இருந்தால் அவர்கள் தொடர்பாக 1977 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதின் தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைபேசி இலக்கம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயற்பாட்டில் இருக்குமெனவும் இதன்படி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கமைய சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அரிசிக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதும் அந்த விலைக்கு வர்த்தக நிலையங்களில் அரிசியை பெற முடியாது என்பதுடன் பல இடங்களில் அரிசிக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




