செய்திகள்

அரிசியை அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

பண்டிகைக்காலப்பகுதியில் எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு அரசாங்கம் இடமளிக்காதென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக்கால பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடிய விலையில் அரிசி விற்பனை செய்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது. நாடுமுழுவதிலும் இவ்வாறு அரிசி விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் சேவை அதிகாரசபையின் விதிமுறைகளை மீறிசெயற்படும் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். -(3)