செய்திகள்

அரியாலையில் நடந்த குருதிக் கொடை முகாம்

யாழ்.அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நடாத்திய குருதிக் கொடை முகாம் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிலையத் தலைவர் செல்லையா பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 22 பேர் வரையானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்.நகர் நிருபர்-