அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு: நீதிமன்றத்தின் அறிவிப்பு!
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இராமநாதன் அர்ச்சனாவின் பதவியை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, மனுவில் கோரப்பட்டுள்ள படி, அர்ச்சுனா நாடாளுமன்றில் அமர்வதையும் வாக்களிப்பதையும் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணையானது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோரின் அமர்வு முன்னிலையின் எடுத்துக் கொள்ளப்பட்டது.




