செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் : ஜே.வி.பி வலியுறுத்தல்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்தியவங்கி ஆளுனருக்கு எதிராக குற்றச்சாட்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் அர்ஜுன மகேந்திரன் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் விசாரைணையுடன் மட்டும் நிற்காது அவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளை உழல் செய்யப்பட்ட மக்கள் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கையெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
n10