அர்ஜுன மகேந்திரன் இலங்கை வராவிட்டால் இன்றபோலின் உதவியை நாடுவோம் ; மகிந்த அமரவீர
சிங்கப்பூருக்கு சென்றுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்தரின் மீண்டும் இலங்கைக்கு வராவிட்டால் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கையெடுப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான மோசடிக்கு அர்ஜுன மகேந்திரனே பொறுப்பு கூற வேண்டுமென கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும். இது தொடர்பாக நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். அவர் தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் இங்கு வராவிட்டால் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கொண்டு வர நடவடிக்கையெடுப்போம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




