செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் எந்தப் பதவிக்கும் நியமிக்கக் கூடாது : ஊழல் எதிர்ப்புக் குரல்

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை அரசாங்கத்தின் 5வருடங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான பிரதானியாக நியமிக்க நடவடிக்கையெடுத்துள்ள நிலையில் அதற்கு ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒருவர் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை அவ்வாறான பதவிகளுக்கு நியமிக்க முடியாது என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரின் நியமனம் நல்லாட்சிக்கு பொறுத்தமற்றதென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R-06