செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் நாளை இலங்கை வருகிறார்?

வெளிநாட்டுக்கு சென்றுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் நாளை 3ஆம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நண்பர் ஒருவரின் திருமணமொன்றுக்காக அவர் இந்தோனேசியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பயணித்திருந்ததாகவும் அவர் நாளை இலங்கை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி பிணை முறியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பான கோப் அறிக்கை வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் வெளிநாட்டுக்கு பயணமாகியிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)