அர்ஜுன மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கபடமாட்டார்: அமைச்சரவை பேச்சாளர்
தற்போதைய மத்திய வங்கி ஆளுனரின் பதவிக்காலம் நீடிக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை ஆளுனராக நியமிக்க தீர்மானித்த நாளிலிருந்து நான் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டே வருகின்றேன். இந்நிலையில் இப்போது நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி ரீதியில் தீர்மானமெடுக்குமென கருதுகின்றேன். எவ்வாறாயினும் அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படாது என்றே நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியவங்கி ஆளுனரான அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவரையே மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டுமென ஆளுங் கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்களினால் நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
R-06




