செய்திகள்

அர்ஜூனா மகேந்திரன் தொடர்பில் பிரதமர் ரணிலுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை

‘கோப்’ அறிக்கையில் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜ+னா மகேந்திரனைப் பாதுகாப்பதற்கு முற்பட வேண்டாம் என புலனாய்வுத்துறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடுமையான அறிவுறுத்தலை விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அர்ஜூனா மகேந்திரன் விவகாரத்தில் ஐ.தே.க. எடுத்துள்ள நிலைப்பாடு மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவரைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் கட்சியின் செல்வாக்கு பாதிக்கப்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.:06