அலப்போ அழிக்கப்படுவது குறித்த அறச்சீற்றம் எங்கே?
நட்டாலிய நவ்கர்டே – கார்டியன்
அலெப்போ மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற தாக்குதல்களிற்கு மேற்குலகின் தலைநகரங்களில் ஏன் ஆர்ப்பாட்டங்கள் ஏன் இடம்பெறவில்லை? மூன்று இலட்ச்சம் மக்கள் கார்ப்பொட் பொம்பிங்கிற்கு உள்ளாகும்போது, பங்கர்பஸ்டர் குண்டுகளும், இரசாயன ஆயுதங்களும், பயன்படுத்தப்படும்போது ஏன் மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை?
சதுக்கமொன்றின் முன்னாலோ அல்லது ரஸ்யதூதரகத்தின் முன்னாலோ ஓருவர் நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியாதபடி காலநிலை மிக மோசமாக உள்ளதா? சிரியாவில் பொதுமக்கள் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது மாற்றத்தை ஏற்படுத்தும் என எவரும் கருதவில்லையா?
லண்டனை எடுத்துக்கொண்டால் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இவை எதுவும் அலப்போ தொடர்பானவையல்ல, அந்த நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளமை, அங்கு ஏற்படுத்தப்படும் அழிவுகள் தொடர்பில் எந்த ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை, பிரான்சில் முஸ்லீம் பெண்களின் நீச்சலுடை தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் தூதரகத்திற்கு முன்னாள் இடம்பெற்றன, ஐரோப்பாவிற்கான நடைபவணி என்ற ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது, கடந்த மாதம் அகதிகளை ஆதரித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவை அனைத்தும் முக்கியமான விடயங்கள். ஆனால் சிரியா மோதல் தொடர்பில் இந்த ஆர்ப்பாட்டங்களுடன் ஓப்பிடக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை.

பாரிஸ், பேர்லின், மட்ரிட் போன்ற தலைநகரங்களுக்கும் இது பொருந்தும்.பிரசல்ஸில் சிலர் அலப்போவை காப்பாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியா தொடர்பான வீதி ஆர்ப்பாட்டங்கள் சிறிய குழுக்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன, அனேகமாக சிரியாவிலிருந்து வெளியேறியவர்கள், அகதிகள் அல்லது மனித உரிமை அமைப்புகளே இதனை முன்னெடுக்கின்றன.
2003 இல் ஈராக் யுத்தத்தின்போதோ அல்லது காசா மோதல்களின் போதோ காணப்பட்ட ஆர்ப்பாட்டங்களை காணமுடியவில்லை, கடந்த காலங்களில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகளை காணமுடியவில்லை.
தொடர்ச்சியாக சிரியா குறித்து பயங்கரமான காட்சிகளை பார்த்தன் காரணமாக எங்கள் உணர்வுகள் மரத்துப்போயிருக்கலாம், – கடந்த வாரம் விமான தாக்குதல்களில் 100 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்று.
சிரியா குழப்பகரமான விடயம் என்பது உண்மைதான் ஆனால் பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என தெரிவிப்பதில் என்ன குழப்பமும் உள்ளது?பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் மருத்துவமனைகளின் மீதும்குண்டு வீசுபவர்களை கண்டிப்பதில் என்ன குழப்பம் உள்ளது?
மேற்குலகம் ரஸ்யாவை சிரியா அரசை கண்டிப்பது உண்மை, அலப்போவை உலகில் முன்னர் பாரிய யுத்தக்குற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளுடன் ஐநா ஓப்பிட்டுள்ளது உண்மை, ஆனால் இவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மக்களின் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனவா?அநீதிகளின் போது அடிப்படை மனித விழுமியங்களிற்காக குரல்கொடுப்பது முக்கியமில்லையா?
அல்லது ரஸ்யசிரிய பிரச்சாரங்கள் காரணமாக நாங்கள் அவர்கள் சர்வதேசட்டங்களை மீறவில்லை என்பதை நம்பதொடங்கிவிட்டோமா? நாங்கள் கார்பெட் பொம்பிங் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என நம்பத்தொடங்கிவிட்டோமா?அலப்போ எவ்வளவு வேகமாக கைப்பற்றப்படுகின்றதோ அவ்வளவிற்கு அது நல்லது என கருதத்தொடங்கிவிட்டார்களா?
அவ்வாறான நிலையை டசிடஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்- ‘‘யுத்தம் காரணமாக பாலைவனத்தை தவிர வேறு எதுவும் மிஞ்சியிராதபோது அவர்கள் அதனை அமைதி, சமாதானம் என்றனர்’’.




