செய்திகள்

அலெப்போ குழந்தைகளிற்காக தனது உயிரை பணயம்வைக்கும் தாதி

சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகர் பாரிய மனிதஅழிவை சந்தித்து வரும் நிலையில் அங்குள்ள மருத்துபணியாளர்கள் தமது உயிருக்கு மத்தியிலும் உன்னதமான பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து சிஎன்என் தெரிவித்துள்ளதாவது:

மலைக்கா 29 வயது தாதி. இரண்டுமாத கைக்குழந்தையான அலியை தனது கையில் பிடித்துவைத்திருக்கின்றார். அவர் சுவாசிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றான். சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தினால் மிகமோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அலெப்பே நகரில் பிறந்த அவன் இருதயபாதிப்புகளை எதிர்கொண்ள்ளான். இதன் காரணமாக அலெப்பேயில் உள்ள அந்த மருத்துமனையில் விசேடபராமரிப்பின் கீழேயே அவன் வைக்கப்பட்டிருந்தான்.

சிரியாவின் அரச சார்பற்ற அமைப்பொன்று அந்த மருத்துவமனைக்கு ஆதரவு வழங்கியிருந்தது.ஓரு மாதத்திற்கு முன்னர் சிரியா அரசாங்கத்தின் விமானதாக்குதலில் குறிப்பிட்ட மருத்துவமனை நேரடியாக இலக்குவைக்கப்பட்டது. 11 சிசுக்கள் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்த அறை புழுதியால் இடிபாடுகளால் சூழப்பட்டது. அதற்கு சில வாரங்களிற்கு பின்னர் இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது. மருத்துவபணியாளர்கள் குழந்தைகளை காப்பதற்கு முயற்சித்தனர். நிலத்தின் கீழ் இருந்த அறைக்குள் கொண்டுசெல்ல முயன்றனர். எனினும் ஏற்கனவே பலவீனமாக காணப்பட்ட அலி தனது ஓக்சிசன் விநியோகத்தையும் இழந்த நிலையில் இறந்துபோனான். மலைக்காவும் ஏனையவர்களும் செயற்கை சுவாசத்தை வழங்க முயன்றனர். அது பலனளிக்கவில்லை. அவன் இறக்கும்போது மலைக்காவின் கையை பிடித்தபடி இறந்துபோனான்.

184

குண்டுவீச்சு புகையை சுவாசித்தன் காரணமாக மூன்று குழந்தைகள் அன்றைய தினம் கொல்லப்பட்டனர்நான் அழுதேன். அழுதுகொண்டிருந்தேன் என்கிறார் மலாக்கா. இதுவேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். யுத்த குற்றம் என்கிறார் அவர். மலாக்காவின் சமீபத்தைய வாழ்க்கையின் பல கொடுமையான நாட்களில் இவை சில. அவர் தற்போதெல்லாம் ஓய்வுநாட்களில் வீட்டிற்கு செல்வதில்லை.

அவரது வீடு தரைமட்டமாகியுள்ளது. ஆகவே அவர் மருத்துவமனையிலேயே உறங்குகின்றார். அவரது குடும்பத்தினர் துருக்கிக்கு தப்பியோடியுள்ளனர். சிரியா ஜனாதிபதியின் ஆதரவாளாரான அவரது கணவர் மலாக்காவை விவகாரத்து செய்துவிட்டார். முற்றுகைக்குள்ளாகியுள்ள அலப்பே நகரில் உள்ள ஓரு சில மருத்துவபணியாளர்களில் இவரும் ஓருவர். 2012 இல் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களின் கரங்களில் வீழ்ந்த இந்தநகரில் 35 மருத்துவர்களே உள்ளனர்.சனத்தொகை 300,000. மலாக்கா விமானக்குண்டுவீச்சிலும் சிக்கினார்.அவரது உடலில் இருந்து குண்டுச்சிதறல்கள் அகற்றப்பட்ட பின்னர் அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார். எனினும் பின்னர் நோய்வாய்ப்பட்டார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

அலெப்போவை விட்டு செல்வதற்கு மறுக்கும் அவர் நான் இந்த குழந்தைகளை விட்டுச்செல்ல மாட்டேன். உயிருக்கு ஆபத்துள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் இங்கேயே மரணிக்கவிரும்புகின்றேன் என தெரிவிக்கின்றார் அவர்.