அவசரமாகப் புதுப்பிக்கப்படும் வெலிக்கடையின் ‘எஸ்’ வார்ட்: முக்கிய தலைவர் விரைவில் கைது?
பீல்ட் மார்ஷல் பொன்சேகா மற்றும் விஜய குமாரணதுங்க ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையின் ‘எஸ்’ பிரிவு வார்ட்டை புதுப்பிக்கும் வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதால், முன்னைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அதிகாரிகள் என 38 விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது. முன்னைய அரசில் இடம்பெற்றிருந்த 33 அரசியல்வாதிகளுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
R-06




