செய்திகள்

அவதானக் குறைவினாலேயே மின்சாரத்தடை ஏற்படுகிறது: திலக் சியம்பலாபிட்டிய

நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் சின தினங்களுக்கு முன்  ஏற்பட்டிருந்த  மின்சாரத் தடைக்கு அவதானக்குறைவே காரணம் என்று திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர் கூறுகையில்;

மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்படாமையினால் இந்த நிலையேற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை நேற்று (26) இரவும் சில இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது  சரி செய்யப்படும் வரையில் இவ்வாறான மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை  சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபை பொதுமக்களைக் கோரியுள்ளது.

n10