செய்திகள்

அவன்கார்ட் நிறுவனத் தலைவரின் 96 நிலையான வங்கி வைப்புகளில் 111 கோடி ரூபா பணம்….!

அவன்கார்ட் கரையோர பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியின் பெயரில் உள்ள 96 நிலையான வங்கிக் வைப்புகளில் ஆயிரத்து 110 மில்லியன் ரூபா பணம் வைப்பிலப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 நிஷங்க சேனாதிபதியின் பெயரில்  கொமர்ஷல் வங்கியில் 62 வைப்புகளும் தேசிய அபிவிருத்தி வங்கியில் 20 நிலையான வைப்புகளும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் ஆறு நிலையான வைப்புகளும் பீப்பில்ஸ் லீசிங் நிறுவனத்தில் ஏழு நிலையான வைப்புகளும்  இலங்கை வங்கியில் ஒரு நிலையான வைப்பும் உள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் 12 நிலையான வைப்புகளும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் ஒரு நிலையான வைப்பும் இலங்கை வங்கியில் மூன்று நிலையான வைப்புகளும்  கொமர்ஷல் வங்கியில் நான்கு நிலையான வைப்புகளும் சம்பத் வங்கியில் மூன்று நிலையான வைப்புகளும் தேசிய அபிவிருத்தி வங்கியில் ஒரு நிலையான வைப்பும் உள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், தமயந்தி ஜயரத்ன இலங்கை வங்கியில் ஐந்து நிலையான வைப்புகளையும் சம்பத் வங்கியில் ஒன்பது கணக்குகளையும் வைத்துள்ளதாகவும்  குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 20104ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி நீதிமன்ற உத்தரவிற்கமைய  32 நிதி நிறுவனங்கள் தொடர்பிலான அறிக்கையில் இந்த தகவல்கள்  வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5