செய்திகள்

அவிசாவளை – கொழும்பு வீதியில் வெள்ளம்

லபுகமையிலிருந்து கொழும்புக்கு நீரை எடுத்துவரும் பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் கொழும்பு – அவிசாவளை பழைய வீதியில் கடுவலை ஹேவாகம பகுதியில் வீதியின் ஒர் பகுதி தாழிறங்கியதுடன் அந்தப் பகுதியில் சிறியளவிலான வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் சிக்கி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் அந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் அந்த பிரதேசத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் சில இடங்களில் இரண்டு அடிக்கும் அதிக உயரத்திற்கு நீர் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)