அவிசாவளை ரயில் மீதும் கல் வீச்சு தாக்குதல்
கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் மீது புவக்பிட்டிய பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயிலில் பயணித்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் ரயில் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் அது தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டிய பகுதியில் 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




