செய்திகள்

அவுஸ்திரேலியாவின் நற்பெயருக்கு தென்னாபிரிக்காவில் பெரும் அடி கிடைத்தது

பந்தை சேதப்படுத்த முயன்ற சர்ச்சை உட்பட பல விடயங்களில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வதற்கு இங்கிலாந்துடனான ஒருநாள் தொடர்பாக வாய்ப்பாக அமைந்துள்ளது என அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாடும் தேசம் என்ற எங்கள் கௌரவத்திற்கு தென்னாபிரிக்காவில் பெரும் அடி கிடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பெய்ன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற விடயங்களை ஏற்றுக்கொள்வது அணி வீரர்களை பொறுத்தவரை கடினமானதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் புதிய முகங்கள் புதிய பயிற்றுவிப்பாளருடன் இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை நாங்கள் மாறியுள்ளோம் என்பதை உலகிற்கு காண்பி;ப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்