செய்திகள்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ் இளைஞர் இருவர் கைது
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த இருவரும் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தபோது அந்த நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதான இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
n10




