அவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்
மருத்துவர் சி.யமுனாநந்தா
பூகோள வெப்பமடைதல், உலகின் பருவகாலநிலையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2000 ஆண்டளவில் எதிர்வு கூறப்பட்ட பூகோள வெப்பமடைதலின் பாதிப்புக்களை இன்று நாம் 2020 இல் அனுபவிக்கின்றோம். இதில் இயற்கையினையே அழிக்கக்கூடீய நிகழ்வாக தென் அமெரிக்காவின் அமேசன் காடுகளில் ஏற்பட்ட தீயும் அண்மையில் அவுஸ்திரேலியாவில் பரவிய தீயும் அமைகின்றன.
பூகோள வெப்பமடைதலால் காலநிலை மாறும்போது, மனிதன் வாழமுடியாதவாறு சூழல் மாறுகின்றது என்பதற்கு அவுஸ்திரேலியாவின் புதர்தீ எடுத்துக்காட்டுகின்றது. இதனால் உயிரினச்சாகியம் அழிவடைந்து மேலும் பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு தீர்வாக புதிய புவியியல் கட்டமைப்பு அணுகுமுறைகள் தேவை. உதாரணமாக அவுஸ்திரேலியாக்கண்டத்தில் குறைந்தது இரு செயற்கையான கடனீரேரிகளை உருவாக்குவதனால் வெப்பக்காற்றின் பரவுகையினை தணிக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் புதர்தீ ஏற்படுவதினை இல்லாது செய்யலாம். மேலும் உகைப்பு மழைமூலம் மழைவீழ்ச்சியினை அதிகரிக்கலாம். இந்தப்பூமியில் கடல் நீரே அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்கும் இயற்கை வளமாகும்.
புவி வெப்பமடைதல், சூழல் மாசடைதல் போன்றவற்றினால் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாத காலநிலை மாற்றத்தினை சாதக நிலைக்கு மாற்றுவதற்கு செயற்கையான புவியியல் மாற்றங்களாக கடனிரேரிகளையும் நெய்தல் நில உருவாக்கமும் அத்தியவசியமானதாகும். இதனை புவியியல் காலநிலைசார் விஞ்ஞானிகள் ஆராய்தல் அவசியம். இதற்கு பல ஆயிரக்கணக்கான மனித உழைப்பு இன்றியமையாதது.
அடுத்து அவஸ்திரேலியாவின் குடியேற்றக்கொள்கைகளை வெறுமனே கல்வி கற்றவர்களை வளர்முக நாடுகளிலிருந்து அகற்றும் வகையிலேயே அமைந்துள்ளது. இது வளர்முக நாடுகளுக்கும் பாதிப்பினை ஏற்படுதடதுவதுடன் அவுஸ்திரேலியாவிற்கும், பாரிய இடர்வரும்போது செயற்படக்கூடிய மனிதவலு இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய அரசு கடின உழைப்பினை மேற்கொள்ளக்கூடிய மக்களையும் தனது தேசத்தில் குடியேற்ற முயற்சி செய்யவேண்டும். அன்றேல் வெந்தனலால் வெள்ளை இனம் அங்கு அற்றுப்போகும் சூழலே ஏற்படும்.
அத்தகைய கடின உழைப்பை ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் நல்கக்கூடியவர்கள். தமிழர்களின் கடின உழைப்பையே பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் இரு நூற்றாண்டுகளுக்கு முன் முற்படுத்தினர்.

துரதிஸ்டவசமாக ஈழத்தில் கந்தகத்தீயினால் கருகிய ஏதிலிகளின் குடும்பங்கள் தமது உயிரைப் பணயம் வைத்து நிம்மதி வாழ்விற்காக படகுகளில் அவுஸ்திரேலியாவில் குடியேற முயற்சித்தபோது அவுஸ்திரேலிய அரசு கொடூரமாக நடுக்கடலில் தடுத்து அமிழ்த்தியமை மனித குலத்திற்கே ஒவ்வாத நடைமுறை. தீயினால் வெந்தவனை நீரிலே அடக்கம்செய்யும் அடக்குமுறை ஆணடவனுக்கும் பிடிக்கவில்லைபோலும்.
இறந்தவர்களின் சாபமும் எம்மைப்பாதிக்கும். ஈழத்தமிழர்கiளை அவுஸ்திரேலியா பாலைவனத்தில் சில பகுதிகளில் குடியேற்றினால் தமிழகம் போன்று நெய்தல் சூழலை மிகவும் நேர்த்தியாக அமைத்து அவுஸ்திரேலியாவின் காலநிலை மாற்றத்தை மாற்றியமைப்பார்கள்.
குமரிகண்டத்தில் தமிழன் வாழ்ந்த காலத்தில் அவுஸ்திரேலியா கண்டம் ஆவுத்தீவு என அழைக்கப்பட்டது. அங்கு ஆவினங்கள் அதிகம் இருந்தன. வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் என்பது சைவமரபு ஆனால் இன்று அவுஸ்திரேலியாவில் ஆவினங்கள் அவற்றின் இயற்கையில் வாழவில்லை. இயந்திரமயப்படுத்தப்பட்ட பொருளாதார நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. ஆவினங்களின் சாபமும் இயற்கையை வெம் பாலைவனமாக்கும் என்பது சைவ நம்பிக்கை. எனவே அவுஸ்திரேலியாவின் புதர்த்தீ தீர்வினை புவியியல், சூழலியல், சமூகவியல், மானிடவியல், விஞ்ஞானத் தொழிநுட்பம், சர்வதேச மனித நேயச்சட்டம் என்பன சார்பான பல்துறை அணுகுமுறையில் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.




