செய்திகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒன்பது இலட்சத்து 82 ஆயிரத்து 770 மேன்முறையீடுகளும் 62 ஆயிரத்து 368 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
-(3)