செய்திகள்

அ. தி.மு. க அலுவலகத்தில் அரைக் கம்பத்திற்கு இறக்கிய கட்சி கொடியை மீண்டும் முழுமையாக ஏற்றப்பட்டது

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக வெளியான தவறான செய்தியை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு மீண்டும் மேலே ஏற்றி பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா குறித்து சில தொலைக்காட்ட்சிகளில் வெளியிடப்பட்ட செய்தியை உறுதிப்படுத்த முடியாமல் ஏனைய ஊடகங்கள் திணறிய வேளையில் அ தி மு க அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதால் பல ஊடகங்கள் கூட வதந்தியை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டன.