செய்திகள்

ஆகஸ்ட் 3 , 5 , 6ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 3ம், 5ம் மற்றும் 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெறும் பாடசாலை ஆசிரிகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 3ம் திகதி வாக்களிக்க முடியும் என்பதுடன் மற்றையவர்கள்  5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.