ஆங் சான் சூகிக்கு மேலும் 3 வருட சிறைத் தண்டனை விதிப்பு
ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மியன்மார் ஜனநாயகக் கட்சி தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் ஜனநாயக அரசின் முன்னாள் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராக இரகசியமாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கு விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஏற்கனவே, மற்ற முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் முறைகேடு வழக்கிற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
எனினும், அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அவரது ஆட்சியை இராணுவம் கடந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி கலைத்தது.
அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து, அவா்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.
அந்த வழக்குகளில் அவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
-(3)




