ஆசிய பிராந்தியத்தில் பிரகாசிக்கும் நாடாக இலங்கை
ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை ஒரு உண்மையான பிரகாசிக்கும் ஔியாக பார்ப்பதாக, நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்த ஜோன் கீ, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதன்பின்னர் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நல்லிணக்கத்தின் சவாலான விடயங்கள் மற்றும் கடந்தகால ஊழல் போன்றவற்றை இலங்கை ஜனாதிபதி மிகவும் திறம்பட கையாள்வதாக நியூஸிலாந்துப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
n10




