ஆசிரியர்களின் போராட்டத்தால் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!
மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அத்துடன், நாளை நடைபெறவிருந்த 9 வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளன
மத்திய மாகாண பாடசாலைகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள், எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் வரும் 22 ஆம் திகதி நடைபெறும்.
இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-(3)




