செய்திகள்
ஆசிரியையிடம் பாலியல் சில்மிசத்தில் ஈடுபட்ட 45 வயது பஸ் நடத்துனர் கைது
முன் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் காலி எல்பிட்டிய பகுதியில் பொலிஸாரினால் கைத செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது அந்த நடத்துனர் ஆசிரியையின் பின் பகுதியை தடவி அவரிடம் தவறாக நடந்துக்கொண்டதாக அந்த ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நடத்துனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 3ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
n10




