செய்திகள்

ஆடைகளுக்குள் ஹெரொயினை மறைத்து கொண்டு வந்த ஒருவர் விமான நிலையத்தில் சிக்கினார்

சூட்சுமமான முறையில் ஆடைகளுக்குள் ஹெரொயின் போதைப் பொருளை மறைத்து அதனை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 வயதுடைய இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து ஒரு கிலோ 650 கிராம் நிறையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் இதன் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சூட்சுமமான முறையில் சேட் கழுத்துப் பகுதி மற்றும் காட்சட்டை இடுப்பு பகுதி ஆகியவற்றில் இவற்றை வைத்து கடத்த முயற்சித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
n10
1 2 3