செய்திகள்
ஆட்சியை கவிழ்க்க முடியாது : மகிந்தவுக்கு நிமல் சிறிபால பதில்
மகிந்த ராஜபக்ஷவின் எண்ணம் நிறைவேறாது எனவும் அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்தவால் ஆட்சியை கவிழ்க்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதையை ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஆனால் பிரதமர் பதவியை மட்டும் மாற்ற முடியும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




