ஆட்டோ – மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! மூவர் படுகாயம் (படங்கள்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், அட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை அட்டன் பிரதான வீதியில் நோர்வூட் நியூவெளி பகுதியில் இவ்விபத்து 11.05.2015 இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றொருவரும் மோட்டார் சைக்கிள் சாரதியுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டர் சைக்கிள் சாரதி பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










