ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்! ராகவா லாரன்ஸ் பிளான்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதை தவிர படங்கள் தயாரிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என நிறைய செய்துவருகிறார். இதுபோக ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்வளித்து வருகிறார்.
மேலும் இவர் சென்னை அம்பத்தூரில் மகான் ராகவேந்திரர் கோவிலையும் கட்டியுள்ளார். இக்கோவில் கட்டப்பட்டு நாளையுடன் 8 வருடம் ஆகிறது. தனது பராமரிப்பில் இருக்கும் குழந்தைகளுடன் அவர் நாளை அக்கோவிலில் புத்தாண்டு கொண்டாடவுள்ளார்.
லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும், பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
N5




