ஆனையிறவு முகாம் தாக்குதல் சந்தேகநபர் விடுதலை
இலங்கையின் வடக்கில் இருந்த முக்கிய இராணுவ படைத்தளமான ஆனையிறவு முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
புன்குயில் என்ற புனைப்பெயரைக் கொண்ட பெர்னாண்டோ எமில்தாஸ் என்பவரே தப்பட்ட தாக்குதல் விடுதலைபபுலிகள் அமைப்பன் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரையாழ் மேல் நீதிமன்ற யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கையில் இணைந்து, 2000ஆம் ஆண்டு ஆனையிறவு முகாம் மீது தாக்குதல் நடத்தினார் என சட்ட மா அதிபரினால் எமில்தாஸுக்க எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே ஒரேயொரு சாட்சியமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த சாட்சியத்தின் உண்மைத் தன்மை வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி சந்தேக நபரை விடுதலை செய்துள்ளார்.
2001ஆம் ஆண்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் வவுனியாவில் வைத்து எமில்தாஸ் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் தலைமையக காவல்துறை அத்தியட்சகர் பத்மினி என்பவரால், எமில்தாஸின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தவதற்கான மேலதிக அறிக்கைகளை நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்படவில்லை.
அத்துடன் சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்குரிய, ஒப்புறுதி ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சந்தேக நபரான எமில்தாஸ் ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார் என்பதை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச தரப்பினர் நிரூபிக்கவில்லை எனக் கூறி நீதிபதி இளஞ்செழியன் அவரை விடுதலை செய்திருக்கின்றார்.
n10




