செய்திகள்

ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு(21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

6.5 மக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் டெல்லி, ஶ்ரீநகர் மற்றும்  காஷ்மீரில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

-(3)