செய்திகள்
ஆயுள்வேத வைத்தியசாலை உபஅலுவலகம் என்பன இராணுவ பயன்பாட்டில் இருந்து பிரதேச நிர்வாகத்திடம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான ஒலுமடு ஆயுள்வேத வைத்தியசாலை உபஅலுவலகம் என்பன இராணுவ பயன்பாட்டில் இருந்து பிரதேச நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான ஒலுமடு ஆயுள்வேத வைத்தியசாலை, உப அலுவலகம், நூலகம், ஆகியவற்றை கடந்த யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையும் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வந்ததுடன் அதனை பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பல தடவைகள் உரிய தரப்புக்களிடம் பிரதேச சபை நிர்வாகம் கோரியிருந்தது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் இராணுவப்பயன்பாட்டில் இருந்து இராணுவத்தினரால் பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது மாங்குளம் முறிகண்டி, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் குறித்த உப அலுவலகம் இயங்கி வருவதுடன் ஆயுள்வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு ஆயுள்வேத வைத்தியசாலை இயங்க ஆரம்பிக்;கும் போது பெருமளவான மக்கள் நன்மையடைய முடியும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
n10




