செய்திகள்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் வீதிகளுக்கு பூட்டு!

தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நிதஹஸ் மாவத்தை வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டின் வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது.
-(3).