செய்திகள்

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு: பல பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு

ற்போது பெய்து வரும் கடும் மழையினால் நாடளாவிய ரீதியில் பல கங்கைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி, களு மற்றும் நில்வலா ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தனகலு ஓயா மற்றும் மஹா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

-(3)